செய்திகள்

அஜித் இந்த நடிகையுடன் விளம்பரத்தில் நடித்திருக்கிறாரா..?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும்  அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளிவந்த இரு திரைப்படங்களும் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்படம் வெற்றிபெறு என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு பின் விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் அஜித். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்தை கடந்த பல ஆண்டுகளுக்கு படங்களில் மட்டுமே காண முடிகிறது. எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும், விளம்பர படங்களிலும் அவர் நடிப்பதில்லை.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜித், நடிகை சிம்ரனுடன் இணைந்து நடித்த விளம்பர படத்தின் வீடியோ ஒன்று அஜித் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

Similar Posts