அந்த பிரபலத்தோட நடிக்காட்டி கூட பரவால..ஒரு தடவ பார்த்தால் போதும்..!
குக்வித் கோமாளி என்றால் ஒரே நகைச்சுவயுடன் கலந்த சமையல் நிகழ்ச்சி தான். இதில் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். இவர் இப்போது காமெடியாகவும் பல பிரபலங்களுடன் நடிக்கிறார்.
புகழ், சோலோ ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.அந்த படத்தின் ஷூட்டிங் பிலிப்பைன்ஸ் நாட்டில் உண்மையான மிருகங்களுடன் நடந்து இருக்கிறது.

இவருக்கு ஒரு பெரிய ஆசை உள்ளதாம்.. அது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையாம் என ஒரு நிகழ்வில் கூறியிருக்கிறார்.
அப்படி இல்லை என்றால் ரஜினியை ஒரு முறை நேரில் பார்த்தால் கூட போதும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.