செய்திகள்

இது என்னப்பா இவருக்கு வந்த சோதனை..!

ஹாலிவுட் பிர‌பல‌ நடிகரான ஜேசன் மோமோ புகழ்பெற்ற அக்குவாமென், கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆகிய படைப்புகள் மூலமாக ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஹவாயில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பணியாளராக கையில் தண்ணீர் பாட்டில்களை ஏந்தியபடி வந்திருக்கிறார் ஜேசன். தலையில் பூ வைத்தபடி வந்த அவரை கண்ட விமான பயணிகள் அனைவரும் திகைப்படைந்திருக்கிறார்கள்.

மேலும், பயணிகள் அனைவர்க்கும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளார். மேலும், அங்கிருந்த அனைத்து பயணிகளுக்கும் 10,000 மைல் இலவசமாக பயணிப்பதற்கான அறிவிப்பையும் ஜேசன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே இதனை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட, அது வைரலாகிவிட்டது.

பிரபல நடிகரான ஜேசன் தண்ணீர் பாட்டில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் விமானத்தில் அவர் பயணிகளுக்கு அளித்தது அவருடைய நிறுவனத்தினுடைய தண்ணீர் பாட்டில்கள் தான் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், ஜேசன் தரப்பிலோ விமான நிறுவனத்தின் தரப்பிலோ இதுகுறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts