என்னம்மா.. இப்படி திடீர்னு சொன்னால் கூப்பிடாமல் இருப்பாங்களா..?
ஷ்ரத்தா ஸ்ரீநாத் யூ டர்ன், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்து இருப்பவர் கைவசம் மூன்று படங்கள் தற்போது உள்ளது.
அவர் தனது பெயர் ஒரு ட்விட்டர் கணக்கில் ஷரத்தா தாஸ் என தவறாக குறிப்பிட்டு இருக்கின்றனர் என்பதை குறிப்பிட்டு தன்னை அப்படி யாரும் அழைக்காதீர்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தனது பெயரை ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என மாற்றிவிட்டதாகவும் ரமா என்பது என் அம்மா பெயர். அதை இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இருக்கிறேன், விரைவில் ட்விட்டரிலும் மாற்றி விடுகிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.