செய்திகள்

கடலே கொந்தளிக்க அஜித்துக்கு கட‌லுக்குள் 100 அடியில் பேனர்..!

நடிகர் அஜித், தனது தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் உயர்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் அஜித்.

அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகை ஷாலினி மீது காதல் வயப்பட்டார் அஜித். திருமணத்துக்கு பின்னர் ஷாலினி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாலும், அஜித் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி கார் ரேஸர், பைக் ரேஸர், துப்பாக்கு சுடும் வீரர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். தற்போது இவர் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனைக் கொண்டாடும் விதமாக புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி கடலுக்கடியில் 100 அடி ஆளத்தில் நடிகர் அஜித்தின் பேனரை வைத்து கெத்து காட்டி உள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar Posts