செய்திகள்

கடை வைத்தாவது பிழைத்துக்கொள்வேன் ஆனால் கவர்ச்சியாக மட்டும் நடிக்க மாட்டேன்..!

திரையுலகில் ஜெயிக்க கவர்ச்சி காட்ட வேண்டும் என்பது அவசியம் இல்லை. தரமான கதை தேர்வும், நடிப்பு திறமையும் இருந்தால் போதும் என தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருபவர் நடிகை சாய் பல்லவி.

தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளிலும் நடிக்க விரும்பாத சாய் பல்லவி, ஹீரோக்களுடன் டூடயட் பாடுவதை விட, கதையின் நாயகியாகவும், சவாலான கதாபாத்திரத்தையும் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். என்பது அவரது சமீபத்திய படங்களின் தேர்வுகளை பார்த்தாலே தெரியும்.

நடிகை சாய் பல்லவியிடம், நெருக்கமான காதல் காட்சிகளிலும், கவர்ச்சியான வேடங்களிலும் நடிக்க கூறும் இயக்குனர்களிடம் கடை வைத்து கூட பிழைத்துக்கொள்வேன் ஆனால் ஒரு போதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கறாராக கூறி விடுகிறாராம்.

Similar Posts