செய்திகள்

கணவரின் கிரியையில் துணை நின்ற நண்பருக்கு நன்றிகள்..! -மீனா

வித்யாசாகர் நடிகை மீனாவின் கணவர் கடந்த ஜுன் மாதம் உயிரிழந்தார். நுரையீரல் தொற்றால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் கணவர் உயிரிழந்த போது மீனாவுக்கு ஆதரவாக அவரது நண்பர்களான கலா மாஸ்டர், நடிகை ரம்பா மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனிருந்து ஆறுதல் தெரிவித்தனர்.

மீனா கணவர் இறந்த போது அனைத்து விதமான இறுதி சடங்கு ஏற்பாடுகளை கலா மாஸ்டர் முன்னின்று செய்தது அனைவரும் அறிந்த ஒன்று.

இதை பார்த்த அனைவரும் இவர்களின் நட்பு குறித்து வெகுவாக பாராட்டி வந்தனர். கடந்த ஜுலை 30 ஆம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

அன்றைய நாளில் தனக்கு பக்க பலமாக இருந்த கலா மாஸ்டர் மற்றும் நடிகை ரம்பாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார்.

எனது கஷ்டமான சூழலில் என் கூடவே இருந்து, சந்தோஷமான சூழலிலும் கூடவே இருந்து சிரித்து பழகி அனைத்து சூழ்நிலைகளிலும் எனக்கு ஒரு பங்காவே இருந்திருக்காங்க.

அவர்களின் இந்த செயலுக்கு நன்றி என்ற வார்த்தை போதவே போதது.ஆனால் நண்பர்களுக்குள்ளே நன்றி மற்றும் மன்னிப்பு சொல்லிக்கவே கூடாது.

நீங்கள் எல்லாரும் கிடைத்ததற்கு நான் ரொம்ப ஹேப்பியாக இருக்கேன். எனவே அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பதிவு மூலம் நடிகர் மீனா தனது கணவர் இறந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதற்கு காரணம் அவரின் நண்பர்கள் மட்டுமே.

Similar Posts