செய்திகள்

கூகுள் பே இருக்கா? கொஞ்சம் அர்ஜண்ட் , மோகன் ஜி பெயரில் மோசடி..!

2016ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மோகன் ஜி.

தற்போது செல்வராகவனுடன் பாகாசுரன் திரைப்படத்தை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை கவனம் செலுத்தி வருகிறார். நிலையில் தான் தனது பெயரில் முகநூலில் கணக்கு தொடங்கி மெசஞ்சர் மூலம் பணம் பெற்று மோசடி நடப்பதாக கூறியுள்ளார் மோகன் ஜி. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள் அவர், தனது பெயரில் பயன்படுத்தி இதுவரை 25 மேற்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் கேட்டு மோசடி நடந்திருப்பதாகவும் ஆனால் இதுவரை யாரும் பணம் செலுத்தவில்லை எனவே அதனை யாரும் நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார் வழக்கமான ‘ஹாய்’,’ஹலோ’ என குறுஞ்செய்தியை அனுப்பிய மோசடி நபர்கள் அவசரமாக பணம் தேவைப்படு கிறது. ரூ.15 ஆயிரம் தொகையை கூகுள்பே அல்லது போன்பே வழியாக அனுப்பி வைக்கவும் இரண்டு நாளில் திருப்பிக் கொடுக்கிறேன் என பதில் வந்துள்ளது. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த சிலர் மோகன் ஜியை தொடர்புகொண்டு கூறியுள்ளனர். இதனையடுத்தே எச்சரிக்கை வெளியிட்டுள்ளார் மோகன் ஜி.

தனது பெயரில் முகநூல் கணக்கை தொடங்கி மெசஞ்சரில் பணம் கேட்டு ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார். தொழில்நுட்ப வளர்ந்து விட்ட சூழ்நிலையில் அனைத்து தேவைகளையும் செல்போன் மூலமே நிறைவேற்ற கொள்ள முடியும் என்று நிலை உருவாகி இருக்கிறது. தீபாவளிக்கு துணி எடுப்பது முதல் காலை டிபன் வரை எல்லாமே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து விடும். அதேபோல ஃபேஸ்புக் ட்விட்டர் ஆகியவற்றில் கணக்கு இல்லாத நபர்களே கிடையாது. உச்சபட்ச நடிகர்கள் ,பிரபலங்கள், அரசியல்வாதிகள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைவரும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த வகையான ஒரு மோசடியில் தனது பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என முகநூலில் கூறியிருக்கிறார்.

Similar Posts