செய்திகள்

சமந்தா பற்றி பேசியதால் கடுப்பான சைதன்யா..!

நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா  இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். நான்கு வருடம் தொடர்ந்து இந்த காதல் திருமணம் கடந்த ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

இருவரும் சுமுகமாக பேசி பிரிந்துவிட்டோம் என்று தெரிவித்தனர். மீண்டும், இவர்கள் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் நாகசைதன்யாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவருடைய முன்னாள் மனைவி சமந்தா குறித்தும் கேள்வி எழுந்தது.

இதற்கு கடுப்பான நாகசைதன்யா ‘ நானும் சமந்தாவும்,பேசி பிரிந்துவிட்டோம். அதை கடந்து நாங்கள் இருவரும் சென்றுவிட்டோம். நீங்களும் கடந்து சென்றுவிடுங்கள். என சொந்த வாழ்க்கையை குறித்து யாரும் பேச வேண்டாம் ‘ என்று கூறியுள்ளார்.

Similar Posts