செய்திகள்

சரவணா அண்ணாச்சிக்கு லலிதா அண்ணாச்சி போட்டியா? முடிவா என்ன சொல்லிருக்கார்…!

தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. ஜவுளி கடைகள் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை தான் சரவணா ஸ்டோர்ஸ். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். மேலும், ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் நடித்தார்.

பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் சரவணா ஸ்டோர்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். அருள் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான படம் தி லெஜெண்ட். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள்.

28ஆம் தேதி திரையரங்குகள் வெளியாகியது. தமிழில் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பான் இந்திய படமாக மாறியுள்ளது. ஆனால், கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல நகைக்கடை உரிமையாளர் கிரண் குமாரும் தனது கடையின் விளம்பரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இணையத்தில் பாப்புலாரிட்டி இருக்கிறது.கிரண் குமார் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில், உங்களுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? எனக் கேட்டிருந்தார். அதற்கு அவர், அந்த ஆசை சுத்தமாக இல்லை. என்னால் டான்ஸ் எல்லாம் ஆட முடியாது. இப்போது இருக்கும் இடமே போதும் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் இவர் சினிமாவுக்குள் வர வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. நல்ல வேல இனி லெஜண்ட்க்கு யாரும் போட்டி இல்லை.

Similar Posts