சின்னத்திரை

சஸ்பென்சை உடைத்த மாமியார் …முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா..!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் 10 வருடங்களாக பிரிந்து வாழும் பாரதி-கண்ணம்மா இருவரும் எப்போது சேர்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால் சந்தேகப் பேய் பிடித்து ஆடும் பாரதிக்கு கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் படாத பாடுபடுத்துகிறார்.

இந்நிலையில் பாரதியிடம் வளரும் ஹேமாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால், ஏற்கனவே அவள் பிறந்த நாள் பரிசாக தன்னுடைய அம்மாவை காட்ட வேண்டுமென பாரதியிடம் கேட்கிறார். அதை செய்வதாக பாரதியும் வாக்கு கொடுத்தார்.

ஹேமாவிற்கு அம்மாவாக பாரதி யாரை காட்டப் போகிறார் என குடும்பமே குழப்பத்தில் இருந்த போது, பாரதி இறந்துபோன தன்னுடைய கல்லூரி காதலி ஹேமாவின் புகைப்படத்தை வரைந்து, அது தான் அவளுக்கு அம்மா என காண்பிக்கிறார்.

இதனால் கொந்தளித்த கண்ணம்மா அனைவரின் முன்னிலையிலும் தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாகவும், அதில் ஒரு குழந்தையை எடுத்து சௌந்தர்யா தன்னுடைய மகன் பாரதியிடம் வளர்க்க சொல்லி கொடுத்ததாகவும் அந்த குழந்தைதான் ஹேமா என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.

இதனால் ஷாக் ஆன பாரதி தன்னுடைய அம்மாவிடம் என்ன நடந்தது என கேட்கிறார். அதற்கு சௌந்தர்யாவும் கண்ணம்மா சொல்வது அனைத்தும் உண்மை என சஸ்பென்சை உடைக்கிறார். இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாத பாரதி, அம்மா தனக்கு துரோகம் செய்து விட்டார் என மனம் கலங்குகிறார்.

இருப்பினும் ஹேமாவின் மீது வைத்த பாசம் உண்மையான பாசம் என்பதால் அவளை துளிக்கூட வெறுக்காத பாரதி, இனி ஹேமாவிற்காகயாவது கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ முடிவெடுப்பார். ஆனால் அப்படி ஒரு சம்பவம் இந்த சீரியலின் கிளைமாக்ஸில் தான் நடக்கும்.

Similar Posts