சிவாவை தெரியாமல் எப்படி நடிப்பீர்கள்..வறுத்தெடுக்கும் sk ரசிகர்கள்..!
இயக்குனர் வின்சண்ட் செல்வாவிடம் யூத், ஜித்தன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின், சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படத்தில் மாளவிகா டான்ஸ் ஆடிய வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது.
நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் மிஷ்கின்.
இந்நிலையில், தற்போது அவர் வில்லனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் மிஷ்கின்.
கடந்த 2014-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் மிஷ்கின். அப்போது டிடி சில நடிகர்களின் பெயரை சொல்ல சொல்ல அவர்களைப் பற்றி ஒரு வரியில் பதிலளித்தார் மிஷ்கின்.
சிவகார்த்திகேயன் பற்றி கேட்டதும் சற்றும் யோசிக்காமல் தெரியாது என கூறி இருந்தார். அவரின் அந்த பேட்டியை தற்போது வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், மிஷ்கினை திட்டித்தீர்த்து வருகின்றனர்.