சீரியல்ல கதைக்கு கல்யாணம் பண்ணி வைச்சா நிஜமாவே கல்யாணம் பண்ணிட்டாங்க..!
யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நட்சத்திரா. சில வாரங்களுக்கு முன்னர் தொடர் நிறைவடைந்த நிலையில் தற்போது வள்ளி திருமணம் தொடரில் நடித்து வருகிறார் இந்த சீரியலில் கதைப்படி நட்சத்திராவுக்கு திருமண எபிசோடு ஷூட் செய்யப்பட்டது.
தற்போது உண்மையிலேயே திருமணம் முடிந்துவிட்டது. திடீர் திருமணம் செய்துகொள்ள காரணம் குறித்து நக்ஷத்திரா வீடியோ மூலம் விளக்கம் அளித்து இருக்கிறார்.

அதில் ‘ஒரே நாளில் முடிவு செய்து அவசர அவசரமாக நடந்த திருமணம் – நக்ஷத்ராவே சொன்ன காரணம். தான் தனது தாத்தா வீட்டில் தான் வளர்ந்து வருவதாகவும் தாத்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் அவர் எனது திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை பட்டதால்,
ஒரே நாளில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், எனக்கு பிளவுஸ் தைக்க கூட நேரமில்லை என்றும் நெருங்கிய நண்பர்களை கூட கூப்பிட முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
