சீரியல் பக்கம் இனி தலை காட்ட போவதில்லை… பிரஜின் அதிரடி முடிவு..!
விஜய் டிவி மற்றும் சன் டிவி நடித்து சின்னத்திரையில் பெரிய அளவில் பிரபலமானவர் ப்ரஜின். சின்னத்தம்பி சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது.
2017ல் தொடங்கிய அந்த சீரியல் 2019ல் நிறைவடைந்தது. தொடர்ந்து அன்புடன் குஷி சீரியலில் அவர் நடித்து இருக்கிறார். அதன் பின் வைதேகி காத்திருந்தால் தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்டார்.
தற்போது லைவ் வீடியோவில் பேசிய பிரஜின் தான் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என கூறி இருக்கிறார். 7 படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம், இனி சினிமாவில் மட்டுமே நடிப்பேன், சீரியல்களுக்கு வரும் திட்டம் இல்லை என்றார்.
மனைவி சாண்ட்ராவும் இப்போது இரட்டை குழந்தைகளை கவனிப்பதில் தான் பிசியாக இருக்கிறார். அவரும் தற்போதைக்கு ரீ என்ட்ரிக்கு வாய்ப்பில்லை..
