செய்திகள்

ஜான்வி கபூரின் வருங்கால கணவருக்கு கண்டிஷன் போட்ட போனி கபூர்…!

ஜான்வி கபூரின் வருங்கால கணவருக்கு போனிகபூர் போட்ட கண்டிசன் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் திரைப்படத் துறையில் மிகப் புகழ் பெற்ற நடிகை.

இவரது மரணம் இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இவரைப் போலவே இவருடைய மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் ஜான்வி கபூரின் வருங்கால கணவர் குறித்து போனிகபூர் போட்ட கண்டிசன் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது ஜான்வி கபூருக்கு 25 வயதாகிறது. மாப்பிள்ளை தன்னை விட உயரமாக இருக்க வேண்டும் என்றும் 6.1 உயரம் உடையவர் தான் தன்னுடைய மாப்பிளையாக இருக்க வேண்டும் போனி கபூர் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை ஜான்வி கபூர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூறியிருக்கிறார்.

Similar Posts