செய்திகள்

தனது மகனை மறந்து நடிகையின் கையை பிடித்துக்கொண்டு ஓடிய தனுஷ்…!

நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வெளியான நிலையில்,சுமார் ஒன்றரை வருடத்திற்கு பின்னர் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளதால், தனுஷின் ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகள் முன்பு கூடி ஆட்டம் – படத்தோடு படத்தை வரவேற்றனர்.

நடிகர் தனுஷின் தன்னுடைய மகன், அனிரூத், நடிகை ராஷி  கண்ணா மற்றும் படக்குழுவினருடன் ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியாக காலை 8 மணிக்கு திரையிடப்பட்ட ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை பார்த்து ரசித்தார். தனுஷ் மற்றும் படக்குழுவினர் வந்த தகவலை அறிந்து, ரசிகர்கள் ஏராளமானோர் திரையரங்கு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திரைப்படம் முடிந்து காரில் ஏறி செல்ல கூட வழி இல்லாததால், தனுஷ் தன்னுடைய பாதுகாவலர்களுடன் நடிகை ராஷி கண்ணா கைகளை பிடித்து கொண்டு, மிகவும் வேகமாக ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து தப்பித்து காரில் செல்ல ஓடிய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Similar Posts