செய்திகள்

நம்பின படத்துக்கு கழுத்தறுத்துட்டாங்களே.. விக்ரமின் கவலை..!

விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படம் உருவாகியுள்ளது. கோப்ரா படத்தில் பத்திற்கும் மேற்பட்ட கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ளார். சமீபத்தில் கோப்ரா படம் ஆகஸ்ட் 11 வெளியாக உள்ளதாக அறிவித்தனர்.

தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது. காரணம் கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்ற நிலையில் தற்போது ஏ ஆர் ரகுமான் தான் காரணம் என கூறுகின்றனர். பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா இரண்டு படங்களையுமே ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

மணிரத்தினத்திற்கும் ஏஆர் ரஹ்மானுக்கும் பல வருட நட்பால் பொன்னியின் செல்வன் படத்திற்கு குறித்த நேரத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து கொடுத்துள்ளார். மேலும் கோப்ரா படத்தில் இசைக்கு முக்கிய பங்கு உள்ளதாம்.

ஆனால் விக்ரம் கோப்ரா படத்தை கூடிய விரைவில் திரையரங்கில் வெளியிட்டு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். ஆனால் ரகுமானால் கோப்ரா படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதால் விக்ரம் அவர் மீது வருத்தத்தில் இருப்பதாகக் கூறி வருகின்றனர். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாவதே சந்தேகம் தான்

Similar Posts