செய்திகள்

நயன்தாராவுக்கு அப்படி என்ன குறுஞ்செய்தி அனுப்பினாங்க கபூர்..!

நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தை குட்லக் ஜெர்ரி என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்து வெளியிட்டனர். ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் நடித்திருந்தார்.

படம் குறித்து ஜான்வி கபூர் கூறியிருப்பதாவது,

குட்லக் ஜெர்ரி ட்ரெய்லரை பார்த்துவிட்டு நயன்தாரா நல்லவிதமாக கருத்து தெரிவித்ததாக எங்கோ படித்தேன். என்னை பற்றியும், ட்ரெய்லரை பற்றியும் ஸ்வீட்டாக சொல்லியிருக்கிறார். அதனால் அவரின் செல்போன் எண்ணை கேட்டு பெற்று மெசேஜ் அனுப்பினேன்.

என் படத்தை பாராட்டியதற்கு மிக்க நன்றி, உங்களின் அன்பான வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று மெசேஜ் அனுப்பினேன்.

உடனே அவர் பதில் அனுப்பினார். பெஸ்ட் ஆஃப் லக். உங்களை விட சிறந்த ஜெர்ரி இருக்காது. கெரியரின் துவக்கத்திலேயே இப்படி ஒரு படத்தில் நடிப்பதை பாராட்டினார் நயன்தாரா. அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு. அவர் பதிலை பார்த்து சந்தோஷப்பட்டேன் என்றார்.

Similar Posts