செய்திகள்

நயன் விக்கிக்கு டஃப் கொடுக்கும் பிரபல நடிகர் மனைவியுடன்…!

பிரபல நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் நடிகர் பிரித்வி ராஜ். 2002ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான நந்தனம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். மலையாளம் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் பிரித்திவி ராஜ்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ், நடிகர் மற்றும் இயக்குநராக மட்டுமல்லாமல், பாடகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என பல முகங்களை கொண்டுள்ளார். லூசிஃபர், புரோ டாடி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

பிரித்விராஜ் சுப்பிரியா மேனன் என்பவரை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் பிரித்விராஜ் செம ரொமான்டிக்கான போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பிறந்த நாள் வாழ்த்துகள் பாரர்ட்னர்… கடினமான சண்டை இல்லை… கையை பிடித்து உன்னுடன் நீண்ட பயணம் இல்லை… இன்னும் பல இருக்கு… என்றென்றும்… என குறிப்பிட்டுள்ளார்

பிரித்விராஜ் ஷேர் செய்துள்ள இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சில நெட்டிசன்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிக்கே டஃப் கொடுப்பீர்கள் போல என குறிப்பிட்டு வருகின்றனர்.

Similar Posts