செய்திகள்

நைட் வேற தொழிலுக்கு போயிட்டு வரியா.? பிரியா ஷங்கருக்கு அவமானம்..!

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஆரம்பித்த இவருடைய பயணம் இன்று வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோயினாக மாறும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துக் கொண்டிருக்கும் இவருக்கு இந்த இடம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை.

பல அவமானங்களை கடந்து தான் அவர் இன்று தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக வந்திருக்கிறார்.

இதனால் கோபமான இயக்குனர் அவரிடம் ஏன் இவ்வளவு லேட்டு, நைட்டு வேற எங்கேயாவது போயிட்டு வந்தியா என்று மிகவும் வக்கிரமாக கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன பிரியா பவானி சங்கர் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு திரைக்குப் பின்னால் இதுபோன்று பல அவமானங்கள் ஏற்படும். ஆனால் இப்போது சின்னத்திரையில் கூட இது போன்ற சம்பவங்கள் நடப்பது நடிகைகளுக்கு எங்கும் மரியாதை இல்லை என்பதை காட்டுகிறது.

Similar Posts