சின்னத்திரை

பிக்பாஸ் 6 தொடங்க கமலா?.. சிம்புவா? வெளியான தகவல்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தையும், இரண்டாம் நிகழ்ச்சியில் பிரியங்காவும் பிடித்தார்கள். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்கி இருந்தார். திடீரென்று விலகினார் கமல். பதிலாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த சீசனில் முதல் பரிசை பாலாஜி முருதாசும் இரண்டாம் இடத்தை நிரூப்பும் பிடித்தார்கள்.

சீசன் 5 இதற்கு முந்தைய நாலு சீசன்களைப் போல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இல்லாமல் இருந்தது இதற்கு காரணம் போட்டியாளர்கள் சரியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

சீசன் 6 போட்டியாளர்களே தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனத்துடன் விஜய் டிவி செயல்படும் என்ன தெரியவந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 தொடங்கும் நாள் வெளியாகி உள்ளது அக்டோபர் இரண்டாம் தேதி சீசன் 6 தொடங்க உள்ளது என்ற உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது வந்த தகவலின்படி சீசன் 6 கமலஹாசன் அவர்களே தொகுப்பாளராக வருகிறார். சீசன் 6 காண புரோமோ காட்சிகள் விரைவில் சூட்டிங் எடுக்கப்பட உள்ளதாகவும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்தது.

Similar Posts