செய்திகள்

பிரபல நடிகைகள் செய்ய தயங்குவதை அசால்டாக அசத்திய அதிதி…!

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் நடித்துக்கொண்டே விரும்பனையும் நடித்து முடித்து விட்டார். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நடிகரும் தயாரிப்பாளமான சூர்யா, இயக்குனர் சங்கர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவின் போது மேடையில் பேசிய அதிதி சங்கர், தேசிய விருது வாங்கிய சூரியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அவர் அறிமுக நடிகை போல் அல்லாமல் தனக்கு முழுவதும் ஒத்துழைப்பு அழைத்து நடிப்பதற்கான பல விஷயங்களை கற்றுக் கொடுத்த கார்த்திக்கு நன்றி தெரிவித்தார்.

அதிதி சங்கர் நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று கூறியவுடன் என்னுடைய அப்பா அம்மா தான் மிகவும் நம்பிக்கையாக ஊக்கமளித்தார்கள். முதல் படம் என் அப்பாவின் ஆதரவால் இருக்கலாம் ஆனால் அடுத்தடுத்த வளர்ச்சி என்னுடைய கடின உழைப்பில் தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் திடீரென யுவன் சங்கர் ராஜாவை மேடைக்கு அழைத்த அதிதி, அவருடன் இணைந்து விருமன் படத்தின் பாடலை பாடி செம ஆட்டம் போட்டிருந்தார் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. முன்னணி நாயகிகள் மேடையில் பர்ஃபாம் செய்ய தயங்கி வரும் வேளையில் சினிமாவிற்கு சமீபத்தில் என்ட்ரி கொடுத்துள்ள அதிதியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar Posts