செய்திகள்

போட்ட காசை எடுத்துவிடுவார் போல அண்ணாச்சி..!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிப்பில் வெளியாகி இருக்கும் தி லெஜண்ட் படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தது. இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500 திரையரங்குகளில் வெளியானது. மேலும் இப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக ஊர்வசி ரவுத்தலா நடித்திருந்தார்.

அண்ணாச்சி சினிமா மீது உள்ள ஆசையால் இப்படத்திற்காக காசை வாரி இறைத்து உள்ளார். இப்படத்தின் ஆடியோ பங்ஷனுக்கு கிட்டத்தட்ட 10 கோடிகளுக்கு மேல் செலவு செய்து நடிகைகளை வரவழைத்து இருந்தனர். மேலும் தி லெஜண்ட் படம் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தலாவுக்கு மட்டுமே 20 கோடி கொடுக்கப் பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் வேற லெவல் இருந்ததாகக் விமர்சனங்கள் வந்தது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் தி லெஜன்ட் படம் முதல் நாளில் 2 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது படம் வெளியாகி நான்கு நாட்களில் நிறைவு செய்த நிலையில் 6 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு தி லெஜன்ட் படம் ஒவ்வொரு நாளும் கோடிகளை குவித்து வருகிறது.

இப்படம் கேரளாவில் அதிக வசூல் செய்து வருகிறது. இப்படியே போனால் அண்ணாச்சி போட்ட காசை எடுத்துவிடுவார் போல. வியாபாரத்தில் தான் அண்ணாச்சி புத்திசாலி என்றால் சினிமாவிலும் கேலி, கிண்டல் செய்தாலும் அதன்மூலமே படத்தை ட்ரெண்டாக்கி லாபத்தை பெற செய்துவிட்டார்.

இப்படம் ஓரளவு நல்ல லாபத்தை கொடுத்து வருவதால் அண்ணாச்சி தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சிலர் அண்ணாச்சி நடிப்பதைக் காட்டிலும் தயாரிப்பில் இறங்கினால் நல்ல லாபத்தை ஈட்டலாம் என கூறிவருகின்றனர்.

Similar Posts