சின்னத்திரை

முதல் மூன்று மாசம் ரொம்ப வாந்தி ..சன் மியூசிக் தியா எமோஷனல்!

தன்னுடைய பிரசவ காலம் குறித்து மனம் திறந்து விஜே தியா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 2k கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியா. முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘சன் டிவி’-யில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காமெடி கேம் ஷோ தான் ‘சூப்பர் சேலஞ்ச்’. இந்த ‘சூப்பர் சேலஞ்ச்’ கேம் ஷோவை தொகுத்து வழங்கியவர் தான் தியா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னர் டிவி பக்கம் வரமால் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார் தியா. இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் தியா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தியா தன்னுடைய பிரசவ காலம் குறித்து பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். தியா அளித்த பேட்டி: அதில் அவர் கூறியிருந்தது, திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து கேரியரில் கவனம் செலுத்தி விட்டு தான் இருந்தேன். கொரோனா லாக்டவுன் வரையிலும் பிஸியாக ஆங்கரிங்காக பண்ணிட்டு இருந்தேன். பின் என் கணவருடன் சிங்கப்பூரில் இருந்ததால என் யூடியூப் சேனலில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தேன். பின்னொரு நாள் டெஸ்ட் கிட் வாங்கிட்டு வந்து காலையில் எழுந்ததும் டெஸ் பண்ணனும் என்று சொல்லுவாங்க. விடிந்த பிறகு எழுந்து பார்க்கும் அளவுக்கு பொறுமை இல்லை. அதனால் நைட் 2 மணிக்கு எழுந்து டெஸ்ட் பண்ணி பார்த்தேன். குட் நியூஸ் தெரிந்ததும் செம ஹாப்பியா ஆக இருந்தது.

தியா கர்ப்பம் குறித்து சொன்னது: இதை நாங்கள் கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை. என் கணவர் தூங்கிட்டு இருந்தார். அவரை எழுப்பி டெஸ்ட் கார்டு காட்டினதும் ரொம்ப சந்தோசப்பட்டு என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார். மறுநாள் விடிந்த பிறகு தான் வீட்டுக்கு போன் பண்ணி எல்லோரிடமும் சொன்னேன். எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். முதல் மூன்று மாசம் ரொம்ப வாந்தி எடுத்துட்டு இருந்தேன். ஒரு நாளைக்கு 20,30 தடவை வாந்தி எடுத்து இருப்பேன் பார்த்துக்கோங்க! என் வாழ்க்கையிலேயே அப்படியான கஷ்டத்தை நான் அனுபவித்ததே இல்லை. அந்த நேரம் வீட்டையும் என் அம்மாவையும் ரொம்பவே மனசு தேடியது. அக்கா கொடுத்த சர்பிரைஸ்: அம்மா கையால சாப்பாடு சாப்பிடணும் போல இருந்தது. நானும் என் கணவரும் சிங்கப்பூரில் இருந்ததால நாங்க தான் எல்லாமே பார்த்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. மூன்றாவது மாதத்தில் அம்மா இங்க வந்திட்டாங்க. அம்மா வந்ததும் எல்லாமே சரியாகிவிட்டது. 5 மாசம் முடிகிற தருணம் அம்மா கூட ஊருக்கு வந்துட்டேன்.

நான் வீட்டுக்குள் நுழையும் போது என் அக்கா, அக்கா பையன், நண்பர்கள் எல்லோரும் அங்கு இருந்தார்கள். என அக்கா சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்பதால் அவங்க சென்னையில் இருப்பாங்க. எல்லாம் செம சர்ப்ரைஸ் கொடுத்தாங்க. வளைகாப்பு விழா: ஊருக்கு வந்ததும் ஏழாவது மாசம் வளைகாப்பு வைத்துக்கொள்ளலாம் முடிவு பண்ணிட்டோம். நான் பெரிய அளவில் வளைகாப்பு பங்க்ஷன் எல்லாம் அட்டன்ட் பண்ணது இல்லை. அதனால் என் பங்ஷனில் நல்லா என்ஜாய் பண்ணினேன். என் மாமியார் வீட்டில் எல்லா சடங்கும் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். மனநிறைவாக வளைகாப்பு விழா இருந்தது. அடுத்த மாதம் டெலிவரி டேட் சொல்லிருக்காங்க. எனக்கு எந்த குழந்தை பிறந்தாலும் ஓகே தான். ஆனால், என் அக்கா பையன் என்னோட மூத்த பையன் மாதிரி. அவனை என் சொந்த பையனாகத் தான் நினைக்கிறேன். ஒரு பையன் ஒரு பொண்ணு ஆசையில் பெண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் அப்பப்ப வரும். புதிய உயிரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்

Similar Posts