செய்திகள்

முன்னணி நடிகர்கள் அழைத்து போகாவிட்டதால் தட்டிப்போன பட வாய்ப்புகள்..!

மல்லிகா ஷெராவத்‍‍‍‍‍‍: இவர் தமிழிலும் கமல்ஹாசனின் தசாவதாரம் படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் வில்லியாக நடித்திருந்த இவர், அதன்பின் ஒஸ்தி படத்தில் கலாசலா என்கிற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

இதுதவிர ஜாக்கிச்சான் உடன் தி மித் என்கிற படத்திலும் நடித்திருந்தார். ஒரு காட்சியில் இப்படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் மல்லிகா. முன்னணி நடிகர்கள் பட வாய்ப்பு வழங்க மறுத்ததற்காக திடுக்கிடும் காரணம் ஒன்றை கூறி உள்ளார்.

அவர் நடிப்பில் தற்போது ஆர்.கே என்கிற திரைப்படம் தற்போது உருவாகி உள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மல்லிகா ஷெராவத், தான் முன்னணி நடிகர்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர்கள் தனக்கு பட வாய்ப்பு தரவில்லை என கூறியுள்ளார்.

அவர்களை பொறுத்தவரை நடிகைகள் என்றால் உட்காரு, எழு என்று எது சொன்னாலும் செய்யவேண்டும். என்னால் அப்படி இருக்க முடியாது. இவ்வளவு ஏன், நள்ளிரவு 3 மணிக்கு போன் செய்து வீட்டுக்கு வா என முன்னணி நடிகர்கள் அழைத்தால் செல்ல வேண்டும்.

மறுப்பு தெரிவிப்பவர்களை அப்படத்தில் இருந்தே தூக்கி எறிந்துவிடுவார்கள். அப்படித் தான் நடந்துகொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் செய்ய மறுத்ததால் தான் பெரிய ஹீரோக்கள் எனக்கு வாய்ப்பு தரவில்லை என மல்லிகா ஷெராவத் கூறி உள்ளார்.

Similar Posts