செய்திகள்

யாத்ரா என்னை மாதிரி, லிங்கா அம்மா மாதிரி யாரும் அசைக்க ஏலாது…தனுஷ் தகவல்!

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷ் மற்றும் காதலித்து திருமணம் செய்து இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

சில மாதங்களுக்கு பிரிந்து விட்டதாக கூறி அதிர்ச்சி தகவல் வெளியிட்டனர்.. ஆனால் சரியான காரணம் இதுவரை தெரியாததால் சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பிள்ளைகள் இருவரும் தனுஸிடமும் ஜஸ்வர்யாவிடமும் மாறி மாறி இருக்கிறார்கள். தனுஷ் அவ்வப்போது வெளி நிகழ்வுகளில் தனது மகன்மார்களை அழைத்து செல்கிறார்.

தி க்ரே மேன் அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. அந்த ப்ரோமோஷனில் பேசியிருந்த தனுஷ். தன் மகன்கள் யாத்ரா லிங்கா பற்றி சில சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.

அதில்,’யாத்ரா என்னை மாதிரி.அமைதியானவர். நாம ஏதும் சொன்னா அதைப் பற்றி யோசிப்பார். சாப்பாட்டில் மட்டும் அவரும் நானும் வெஜிடேரியன். ஆனால் லிங்கா அவங்க அம்மா மாதிரி, படு உஷார். ஏமாற்றவே முடியாது. கதை சொல்லித் தூங்க வைச்சிடலாம்னு நினைச்சா நீங்கதான் ஏமாந்து போவீங்க. அவங்க அம்மா எப்பவுமோ எதுலையுமே ஷார்ப். படிச்சவங்க இல்லையா!. அப்படித்தான் இருப்பாங்க.’ என்கிறார்.

அதன்போது எழுந்த கேள்வி, அப்போ ஐஸ்வர்யாவை ஏமாற்றமுடியாதுனு சொல்லறிங்க… அப்படித்தானே? என்று கேட்டனர். இதற்கு “அட நல்லவிதமாத்தாங்க சொல்லறேன்” என்றார் நகைச்சுவையுடன் தனுஷ்.

Similar Posts