செய்திகள்

லவ்வே செட் ஆகல..வீட்டு மாப்பிள்ளையை கரம்பிடிக்கவுள்ள சின்ன குஷ்பு..!

குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா, மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் 2, சிம்புவுக்கு ஜோடியாக வாலு போன்ற படங்களில் நடித்தார்.

இவர் பார்ப்பதற்கு இளம் வயது குஷ்பு போன்றே இருந்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக குட்டி குஷ்பு என்றும் அழைத்தனர். பின்னர் உடல் எடை காரணமாக பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கியது.

சிம்புவுடனான முதல் காதலும் முறிந்தது, இந்நிலையில் நடிகை ஹன்சிகா திருமணத்துக்கு தயாராகி வருவதாக திரையுலக வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

காதல் எதுவும் செட் ஆகாததால் வீட்டில் பார்க்கும் பையனுக்கே ஓகே சொல்லிவிட்டாராம் ஹன்சிகா. அதன்படி அவருக்கு பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Similar Posts