சின்னத்திரை

1000 எபிசோட் சுத்தும் போது தெரியல.? அசிங்கப்படுத்திய பார்வதி..

ஜீ தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு 5 வருடங்களாக ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் நேற்று கிளைமாக்ஸ் காட்சிகளுடன் நிறைவடைந்தது. ஆகையால் தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பான  இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகளை 16 திருப்பங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்தனர்.

அதில் ஜீ தமிழ் சீரியல் பிரபலங்களும் இடம் பெற்றனர். செம்பருத்தி சீரியல் நிறைவு நாள் அன்று ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி விழா கொண்டாட்டத்தின்போது இந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

இந்த சீரியலின் மூலம் 5 வருடங்களாக இணைந்து இருந்த பிரபலங்கள் பிரிவதை நினைத்து கண் கலங்கினர். ஆனால் செம்பருத்தி சீரியலுக்கு இவ்வளவு சீக்கிரம் முடிவு வந்திருக்க கூடாது. ஒரு காலத்தில் ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக டிஆர்பி-யில் பெரும் அடிவாங்கி பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு முழு காரணம் சீரியலில் கதாநாயகனாக ஆதி கதாபாத்திரத்தில் முன்பு நடித்த கார்த்தி தான்.

அவர் இந்த சீரியலில் விலகிய பிறகுதான் ரசிகர்களிடமிருந்து போதிய வரவேற்பு கிடைக்காமல் போனது. இதனால் கார்த்தியின் மீது செம்பருத்தி சீரியல் குழுவினர்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருந்திருக்கின்றனர். இதை யாரும் வெளிப்படுத்தாமல் இருந்த நிலையில், சீரியலின் கதாநாயகி பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷபானா மட்டும் வெற்றி விழா மேடையில் போட்டு உடைத்து ரசிகர்களை விளாசி இருக்கிறார்.

கார்த்திக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர் இந்த சீரியலில் விலகிய பிறகுதான் அவருக்கு பதில் அக்னி ஆதி கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார். அக்னி நடிக்க வந்ததால் தான் கார்த்தி சீரியலில் இருந்து தூக்கப்படவில்லை.

இந்த சீரியலில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல், அவர் தானாகவே விலகி விட்டார். அக்னி வரவில்லை என்றால் வேறு ஒரு நடிகர் ஆதியாக நடித்திருப்பார். இதைப் புரிந்து கொள்ளாத ரசிகர்கள் அக்னியை சோசியல் மீடியாவில் கேவலமாக விமர்சித்து அவரை சமூக வலைதள பக்கம் செல்ல விடாமல் திட்டித் தீர்க்கின்றனர்.

இதனால் அவருடைய பல நாள் தூக்கம் பரிபோனதுடன் ஆதியாக நடிப்பதிலும் பெரும் சங்கடத்தை சந்தித்திருக்கிறார். இதுயெல்லாம் சரியல்ல. ரசிகர்கள் இப்படி எல்லாம் செய்திருக்கக் கூடாது என ஷபானா தன்னுடைய ஆதங்கத்தை கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அந்த சமயம் செம்பருத்தி சீரியல் குடும்பமே அவருக்கு சப்போர்ட்டாக நின்றனர். பார்வதியின் இந்தப் பேச்சைக் கேட்ட ரசிகர்களும் கார்த்தி சீரியல் இருந்து விலகியதால்தான் ஆதங்கத்தை காட்டியதாக ஒத்துக் கொண்டுள்ளனர். மேலும் சிலர் அக்னியின் அடுத்தடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Similar Posts