செய்திகள்

வாரிசு அடுத்த ஷெட்யூலில் பங்கேற்ற விஜய்.. வைரலாகும் போட்டோ..!

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் அடுத்த ஷெட்யூல் விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய நடிக்கும் திரைப்படம் வாரிசு. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராப்பாத்தில் நடைபெற்று வந்தது. பிரத்யேக செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பில் இருந்து போட்டோக்களும் வீடியோக்களும் கசிந்து பரபரப்பை கிளப்பியது.

vaarisu

இந்நிலையில் ஹைத்ராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் விஜய் சென்னை திரும்பினார். படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடைபெறும் என கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூல் இன்று முதல் விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் விஜய் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் விசாகப்பட்டினத்தில் லைவ் லொகேஷன்களில் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது.

ஆனால் படப்பிடிப்பு நடைபெறும் இடம் குறித்த தகவலை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். ரசிகர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் படப்பிடிப்பு நடைபெறும் இடம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் நிறைவடையும் என தெரிகிறது.

Similar Posts