செய்திகள்

விஜயின் சொந்த வீடு ஜப்தியாகவுள்ளதா..? பரபரப்புடன் ரசிகர்கள்..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தளபதி  விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2011ம் ஆண்டு வெளியான சட்டப்படி குற்றம் திரைபடத்தின் விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாய்.

இதனை வழங்காததை அடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வெறும் 76 ஆயிரம் பணத்துக்காக ஜப்தியாகும் விஜயின் அப்பாவின் சொத்து! ஷாக்கில் உறைந்த திரையுலகம் | Vijay S Father House Receives Court Notice

இந்த வழக்கில் சந்திரசேகருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நீதிமன்ற பணியாளர்கள், பொருட்களை ஜப்தி செய்ய சென்ற போது சந்திரசேகரின் அலுவலக பணியாளர்கள் ஜப்தி செய்ய விடவில்லை எனக் கூறி, காவல் துறை உதவி வழங்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வெறும் 76 ஆயிரம் பணத்துக்காக ஜப்தியாகும் சொத்து

வெறும் 76 ஆயிரத்து 122 ரூபாய்க்காக விஜய் அப்பாவின் வீட்டு பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Gallery

Similar Posts