செய்திகள்

ஹன்சிகாவிடம் ப்ரபோஸ் செய்ய சொன்னார் உதய் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-சந்தனாம் ‍-

நடிகரும் எம் எல் ஏ வுமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் சந்தானம் இணைந்து நடித்திருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் அதிக படங்களை விநியோகம் செய்யும் உரிமை பெற்று வருகிறது.

சந்தானத்தின் குலுகுலு படத்தை ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்தது. இந்நிலையில் சந்தானம் உதயநிதி ஸ்டாலின் குறித்து ; அதாவது ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் முதல் காட்சியிலேயே சத்தியம் தியேட்டர் முன்பு உதயநிதியை நடனம் ஆட வைத்தாராம் இயக்குநர் ராஜேஷ்.

அப்போதுதான் உதயநிதியின் கூச்சம் போகும் என்று அப்படி செய்தாராம். ஹீரோ பேச வேண்டிய டயலாக்கை கூட ஹீரோவுக்காக அவரது நண்பரான சந்தானத்தை பேச வைத்தாராம் உதயநிதி. அதுமட்டுமில்லாமல் ஹன்சிகாவிடம் ப்ரபோஸ் செய்வதை கூட சந்தானத்தைதான் செய்ய சொன்னாராம் உதய்.

இதனால் சந்தானமும் இயக்குநர் ராஜேஷும் இவர் என்ன இவ்வளவு கூச்சப்படுகிறார் என உதயநிதி குறித்து அடிக்கடி பேசிக் கொள்வார்களாம். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் உதயநிதி பிச்சு உதறியதை பார்த்து இப்படி பட்டையை கிளப்புறாரே என்று தானும் இயக்குநர் ராஜேஷும் பேசிக் கொண்டதாக கூறியுள்ளார் சந்தானம்.

Similar Posts