செய்திகள் | திரைப்படங்கள்

வெளியானது பத்து தல டீசர் அப்டேட் | 10 Tala Teaser Update Released

சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பத்து தல படத்திற்கு சிம்பு டப்பிங் கொடுக்கவில்லை எனவும், இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் எனவும் சொல்லப்பட்டது.ஆனால், சிம்புவின் அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பத்து தல டீசர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில படப்பிடிப்பு முடியாததால் அப்போது ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசைமைத்துள்ள பத்து தல படத்தில் இருந்து, நம்ம சத்தம் என்ற முதல் பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் டீசர் இன்று (மார்ச் 3) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று மாலை 5.31 மணிக்கு பத்து தல டீசர் வெளியாகவுள்ளது.

கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் ஹிட்டான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காகதான் பத்து தல உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ளார். ஏற்கனவே ஏஜிஆர் கேரக்டரின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்று வெளியாகவுள்ள பத்து தல டீசர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts