செய்திகள்

2 மணிநேரம் தொடர்ந்து பார்த்தீபன் மூஞ்சிய பாக்க முடியுமா..? _ ராதாரவி

இரவின் நிழல் பார்த்திபன் இயக்கி, நடித்த ப‌டம். திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அவர் ஒரு ஷாட்டில் படமாக்கி இருந்தார்.

உலகிலேயே நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெயர் பெற்றது. பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் அனைவரும் படத்தை பாரட்டாமல் இல்லை.

மு.க.ஸ்டாலின் அண்மையில் இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்து பார்த்திபன், ஒரு டெக்னாலஜி சீனியர் என நிரூபித்துவிட்டதாக பாராட்டினார்.

இந்தநிலையில், படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இயக்குனர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் சிவா, தனஞ்செயன் மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதில் நடிகர் ராதா ரவி பார்த்திபனின் முயற்சியை பாராட்டி பேசினார். அப்போது, பார்த்திபன் மூஞ்சிய 2 மணிநேரம் தொடர்ந்து பார்க்க முடியுமா, ஆனா ஒத்த செருப்பு படத்துல பார்க்க வச்சான்ல, அதுதான் திறமை.

இப்போலாம் பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க வர்றாங்க. நான் சாபம் விட்டாலே அப்படி ஆகிடுவாங்க போல. விளம்பரத்துல ஆடுறத பார்த்தப்பவே இவன் நடிக்க வந்துருவான்னு சொன்னேன் ஒரு மேடைல. அதே மாதிரியே வந்துட்டான்யா என பேசி உள்ளார்.

Similar Posts