செய்திகள்

30 தடவையா..?டார்ச்சர் அனுபவித்த நித்யா மேனன்..!

நித்யா மேனன் தமிழில் நானி நடிப்பில் வெளியான வெப்பம் ஹீரோயினாக அறிமுகமானார்.இவர் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

சமீபத்தில் இவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. அது உண்மையில்லை என விளக்கம் அளித்தார் நித்யா . இதற்கு சந்தோஷ் வர்க்கி என்கிற இளைஞர் தான் காரணமாம். அவர்தான் மேனனை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பேட்டி அளித்திருந்தார்.

நடிகை நித்யா மேனன் அந்த இளைஞரால் தான் 6 வருடங்களாக டார்ச்சர் அனுபவித்து வருவதாக கூறி இருக்கிறார். தான் பலமுறை அவர் அழைக்கும் மொபைல் எண்ணை பிளாக் செய்தாலும், வேறு வேறு எண்களில் இருந்து அழைத்து அவன் தொல்லை தருவதாக கூறி உள்ளார். இதுவரை அவனிடமிருந்து வந்த 30 மொபைல் எண்களை தான் பிளாக் செய்துள்ளதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

Similar Posts