செய்திகள்

40 வருடத்திற்கு மேல் நடித்த ரஜனிகாந்த்க்கு அம்ரித் பட்டம் ..!

நடிகர் ரஜினிகாந்துக்கு நியூஸ் 18 குழுமம் சார்பில் அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலொச்சி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 71 வயதை கடந்துள்ள ரஜினிகாத் தற்போது நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

வசூல் மன்னனாக வலம் வரும் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது முதல் மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது வரை பெற்றுள்ளார். திரைத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆற்றிவரும் சேவையை பாராட்டி அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டுள்ளது

அம்ரித் ரத்

இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூஸ் 18 குழுமம் சார்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைப்பெற்ற இவ்விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சார்பாக, அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

மேலும் அப்பாவுக்கு அம்ரித் ரத்னா விருது வழங்கியதற்காக நியூஸ் 18 குழுமத்திற்கும் ஐஸ்வர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், நன்றி நியூஸ் 18, நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அப்பாவுக்கு அம்ரித் ரத்னா விருது வழங்கி கவுரவித்தமைக்கு நன்றி என கூறி விருது பெற்ற போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

Similar Posts