வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிச்சைக்காரன் 2 திரைப்படம்..!(A case has been registered for the movie pichaikkaran 2)
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி வரும் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழு படப்பிடிப்பை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்காக, படக்குழுவினர் டிரோன் உதவியுடன் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அனுமதியின்றி டிரோன் பறக்கவிட்டதால் படக்குழுவைச் சேர்ந்த மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த படத்தில் சில மாற்றங்களைச் செய்த விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குனரின் இடத்தை பிடிக்கவுள்ளார். மேலும், இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.
