ரஜினிக்கு இன்னும் நிஜத்திலும் எதிரியாக பிரபல நடிகர்..!
நடிகர் சத்யராஜ் தான். இவர் ரஜினியுடன் இணைந்து மிஸ்டர் பாரத் போன்ற சில திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு ரஜினிக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதற்கு காரணம் காவிரி பிரச்சினையின் போது அவர்களுக்குள் ஏற்பட்ட மன கசப்பு தான் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு தான் அவர்கள் இருவரும் எதிர எதிர் துருவங்களாக மாற ஆரம்பித்தனர். அதனால் தான் சத்யராஜ் இன்றுவரை சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க மறுத்து வருகிறார்.