செய்திகள்

கொஞ்சம் வருத்தம் தான் கமலோட நடிக்கல,ஆனா இதுதான் காரணம்..நதியா(a little sad not acting Kamal , but reason.. Actress Nathiya)

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார் நடிகை நதியா. ரீஎன்றி கொடுத்த இவர் அந்த அழகும் வயதும் குறையாமல் அப்படியே இருக்கின்றார்.

அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். ஆனால் கமலுடன் மட்டும் ஒரு படம் கூட நடிக்கவில்லை. இது குறித்து நதியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது அப்போது தனக்கும் கமலுடன் நடிக்கவில்லை என்பது வருத்தம் தான்.

ஆனால் என்னால் நடிக்க முடியாமல் போனது. கமலின் விக்ரம் முதல் பாகத்தில் நான்தான் நடிக்க இருந்தது. அப்போது நிறைய தமிழ் படங்களில் கால்ஷீட் கொடுத்திருந்தேன். அதனால் விக்ரம் படம் கைநழுவியது. இனியும் வரலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று தெரிவித்தார்.

Actress Nathiya

Similar Posts