செய்திகள் | திரைப்படங்கள்

ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்து லைக்கா வெளியிட்ட மாஸ் அறிவிப்பு | A mass announcement by Leica about Rajinikanth’s next film

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தை த.செ.ஞானவேல் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரு திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

A mass announcement by Leica about Rajinikanth’s next film

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் 170-வது படம் குறித்து இணைய தளங்களில் ரசிகர்கள் பலவிதமான யூகங்களையும், தங்களது ஆசைகளையும் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள தலைவர்170 படத்தினை ‘ஜெய்பீம்’ புகழ் த.செ.ஞானவேல் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts