செய்திகள்

இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது | A photo of young musician Lydian Nathaswaram with actor Simbu is going viral.

அமெரிக்காவில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவில், பிரசித்தி பெற்ற இசைக் கலைஞர்களுக்கு மத்தியில், ஒரே நேரத்தில் இரு பியானோக்களில் இருவிதமான பாடல்களை வாசித்து ரூ.7 கோடி பரிசு வென்றவர் தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம். பரிசுத் தொகையை வென்று உலக இசை ரசிகர்கள் அத்தனை பேரையும் தன்னை நோக்கித் திருப்பியிருக்கிறார். இந்த போட்டிக்கான நடுவர்கள் வெறுமனே அமெரிக்காவை சார்ந்தவர்கள் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்திருந்தனர். ஆனால் அத்தனை பேரையும் கட்டிப் போட்டவன் லிடியன் நாதஸ்வரம்.

A photo of young musician Lydian Nathaswaram with actor Simbu is going viral.

தமிழகத்தில் உள்ள இசையமைப்பாளரான வர்ஷன் சதீஸ் என்பவரின் மகன் லிடியன். லிடியனுக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். அப்பாவும் இசையமைப்பாளர். இசைக் குடும்பத்தில் பிறந்ததால் இயல்பாகவே இவருடைய ரத்தத்தில் அந்த ஆர்வம் கலந்து விட்டது.

A photo of young musician Lydian Nathaswaram with actor Simbu is going viral.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்புவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதில் அக்கறையுள்ள சகோதரர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts