செய்திகள்

28 வது திருமண நாளில் AR ரஹ்மான் பகிர்ந்த புகைப்படம் | A photo shared by AR Rahman on his 28th wedding day

மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியாகி இருந்த ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், அதன் பிறகு தொட்டது எல்லாம் தூள் என்ற கணக்கில் தான் சென்று கொண்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து வேகமாக நகர்ந்து சென்ற ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் வரைக்கும் சென்று ஆஸ்கர் விருதினையும் வென்றதுடன் இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருந்தார்.

A photo shared by AR Rahman on his 28th wedding day

இசை அமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன போதும் தொடர்ந்து தனது இசையால் ரசிகர்களை கட்டி போட்டும் வருகிறார். AR ரஹ்மான் இசையில் கடந்த ஆண்டு இரவின் நிழல், பொன்னியின் செல்வன் 1, வெந்து தணிந்தது காடு, கோப்ரா உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருந்தது. இந்த படங்களில் வரும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்தும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்றிருந்தது.

A photo shared by AR Rahman on his 28th wedding day

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டிலும் பத்து தல, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், லால் சலாம், ஆடுஜீவிதம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களுக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதில், சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. 30 ஆண்டுகள் தாண்டியும் பல திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து தனக்கென ஒரு இசை ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் AR ரஹ்மான்.

A photo shared by AR Rahman on his 28th wedding day

இந்த நிலையில், தனது திருமண நாளை முன்னிட்டு மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் AR ரஹ்மான். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி, சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இந்த தம்பதிக்கு கதீஜா ரஹ்மான், ரஹீமா ரஹ்மான் மற்றும் அமீன் என மூன்று பிள்ளைகளும் உள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் – சாய்ரா பானு திருமணம் முடிந்து 28 ஆண்டுகள் ஆன சூழலில், தனது திருமண நாளை முன்னிட்டு மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தவண்ணம் உள்ளனர்.

Similar Posts