செய்திகள்

வடிவேல் கன்னத்தில் விழுந்த குத்து.. என்னா அடிப்பா!

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் இப்படத்தையும் இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இப்படத்தில் வடிவேலு நகைச்சுவை வேடத்தில் நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்பட 5 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம். பாகுபலி பட இசையமைப்பாளர் மரகதமணி தான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை ராதிகா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் வடிவேலுவின் கன்னத்தில் லாரன்ஸ் மற்றும் ராதிகா குத்து இதில் லாரன்ஸ் மெதுவாக குத்தினாலும், ராதிகா கொஞ்சம் வேகமாக‌ குத்துகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar Posts