பத்து தல செகண்ட் சிங்கிள் சிம்புவுடன் இணந்த ஏஆர் அமீன் | A. R. Ameen join to Pathu Thala Second Single
சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் இரண்டும் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், தற்போது செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. நினவிருக்கா என மெலடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை அவரது மகன் ஏஆர் அமீன் பாடியுள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது. நம்ம சத்தம் எனத் தொடங்கும் அந்தப் பாடலை ஏஆர் ரஹ்மான் பாடியிருந்தார். சிம்புவுக்கு மாஸ் காட்டும் விதமாக நம்ம சத்தம் பாடல் உருவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது செகண்ட் சிங்கிள் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. கபிலன் வரிகளில் நினைவிருக்கா எனத் தொடங்கும் இந்தப் பாடலை ஏஆர் அமீன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் வரும் 13ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

பத்து தல படத்தின் முதல் பாடலை ஏஆர் ரஹ்மான் பாடிய நிலையில், செகண்ட் சிங்கிளை அவரது மகன் ஏஆர் அமீன் பாடியுள்ளார். இது ஏஆர் ரஹ்மான் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.