தோல்வியை ஈடுகட்ட சம்பளத்தை கொடுத்த அமீர்கான்..!
பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீசான திரைப்படம் லால் சிங் சத்தா.
அமீர்கான் மீது கொண்ட வெறுப்பு காரணமாக இப்படத்தின் ரிலீசின் போது பாய்காட் டிரெண்ட் தலைதூக்கியது. இதனால் லால் சிங் சத்தா படம் படுதோல்வியை சந்தித்தது.
கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக நடிகர் அமீர்கான் தனக்கு சம்பளமே வேண்டாம் என திருப்பிக்கொடுத்துள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
