செய்திகள்

ஆத்விக் அஜித்தை கொஞ்சம் IPL சென்னை அணி உரிமையாளர் அபிஷேக் பச்சன் |Abhishek Bachchan, the owner of IPL Chennai team, kissed Advik Ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு நடிகர் அஜித் ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின.

சமீபத்தில் நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி அஜித்குமார் மற்றும் மகன் ஆத்விக் அஜித்குமார், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் ISL கால்பந்து போட்டியை காண வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. சென்னையின் FC & North East FC மோதும் இந்த போட்டியை காண சென்னை அணியின் சீருடை அணிந்து ஆத்விக் அஜித்குமார் வந்திருந்தார்.

இந்த புகைப்படத்தை சென்னை அணி தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தது. அந்த போட்டியின் போது சென்னையின் FC அணி உரிமையாளர் அபிஷேக் பச்சன், ஷாலினி அஜித்குமார் & ஆத்விக் அஜித்குமார் அமர்ந்திருந்த கேலரி நோக்கி வந்து ஷாலினியிடம் பேசினார். மேலும் அங்கு நின்றிருந்த தமது மகன் ஆத்விக் அஜித்குமாரை அபிஷேக் பச்சனுக்கு ஷாலினி அறிமுகம் செய்து வைத்தார். உடனே ஆத்விக்கை உச்சந்தலை கோதி நடிகர் அபிஷேக் பச்சன் கொஞ்சினார்.

Abhishek Bachchan, the owner of IPL Chennai team, kissed Advik Ajith

அபிஷேக் பச்சன் தந்தை அமிதாப் பச்சன் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் உல்லாசம் படத்தில் நடித்துள்ளது குறிப்படத்தக்கது.

Similar Posts