அதிரடி முடிவெடுத்த நடிகர் அமீர்கான், அதிர்ச்சியில் ரசிகர்கள்..!(Actor Aamir Khan took a drastic decision, fans are in shock)
35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென முத்திரையை பதித்திருக்கிறார் அமீர்கான். அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தாவசூல் ரீதியாக கடும் இழப்பை சந்தித்தது.
இந்நிலையில் அவர் தெரிவிக்கையில், நடிப்பில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகாது என்று கருதுகிறேன்.
அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணமாக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். எனது உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கும் காலகட்டத்தில் நான் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
