நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.| Actor Ajith Kumar’s father Subramaniam passed away this morning due to ill health.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். அஜித்தின் தாயார் ஏற்கனவே உடல்நலக்குறைவால் உயிரிழக்க தந்தை சுப்ரமணியம் உயிரோடு இருந்தார். அவர் அஜித்தின் பெசண்ட் நகர் வீட்டில் இவ்வளவு நாள்கள் வசித்துவந்தார். வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு முழு ஓய்வில் இருந்தார் சுப்ரமணியம். இந்தச் சூழலில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அஜித் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவருடைய மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.