நடிகர் அமிதாப் பச்சனின் பெயர் புகைப்படங்களை பயன்படுத்த தடை..!(Actor Amitabh Bachchan’s name was banned from using photos)
நடிகர் அமிதாப் பச்சன் சார்பில் அவர் வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, பிரவீன் ஆனந்த் ஆகியோர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், ‘அமிதாப் பச்சன் பெயரைப் பயன்படுத்தி, லாட்டரி சீட்டு நடைபெறுகிறது. போலியாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்துகின்றனர். உடைகள், சுவரொட்டிகளில் அவர் புகைப்படங்களைப் பயன்படுத்துகின்றனர்.
‘அமிதாப் பச்சன் வீடியோ கால்’ என்ற போலி மொபைல் ஆப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
விசாரித்த நீதிமன்றம் அமிதாப் பச்சனின் படம், பெயர் மற்றும் குரல் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்த, புது டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
