செய்திகள்

காதலி கர்ப்பமான செய்தியால் கோவத்தில் நடிகர் அர்ஜூன் கபூர்…!(Actor Arjun Kapoor in angry to the news of his girlfriend’s pregnancy)

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர்.இவர் 49 வயதான நடிகையும் மாடலுமான மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார்.இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் டேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் நடிகர் அர்ஜூன் கபூரும் இந்த தகவலை மறுத்துள்ளார். அதோடு இந்த செய்தியை வெளியிட்ட ஊடகத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார் அர்ஜூன் கபூர்.

நீங்கள் மிகவும் தரம் தாழ்ந்து போயிருக்கிறீர்கள். ஒரு குப்பைச் செய்தியை ரொம்ப சர்வ சாதாரணமாக வெளியிட்டுள்ளீர்கள்.

இதுபோன்ற செய்தியை அடிக்கடி எழுதி வருகிறீர்கள். இதுபோன்ற பொய் செய்திகளையும் கிசுகிசுக்களையும் எழுதி உண்மையாக்க பார்க்கிறீர்கள். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் விளையாடாதீர்கள் என கண்டித்துள்ளார்.

Actor Arjun Kapoor

Similar Posts