18 வருடங்களுக்கு பின் 2ம் பாகத்தில் ரொமாண்டிக்காக நடிகர் தனுஷ்..!(Actor Dhanush for romance in the 2nd part after 18 years)
18 வருடங்களுக்கு முன் வெளியாகிய ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. அதில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளாராம்.
கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. முழுக்க முழுக்க இளசுகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் நல்ல பாராட்டுகளை பெற்றதோடு விருதுகளையும் வாங்கி குவித்தது
மேலும் இந்த படத்தின் முதல் பாகத்தை தயாரித்திருந்த ஏ எம் ரத்தினம் இந்த இரண்டாம் பாகத்தையும் எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
தற்போது பேச்சு வார்த்தைகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில் இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.
